Thursday, January 22, 2015

TNPSC – Group II தேர்வு- 2015 (நேர்முகத்தேர்வு)
குருப் 2 தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.
·         பிரிலிமினரி தேர்வு,
·         மெயின் தேர்வு,
·         நேர்முகத்தேர்வு
முதல் கட்டமான பிரிலிமினரி தேர்வில் 300 மதிப்பெண்கள் கொண்ட 200 வினாக்கள் கொண்ட கொள்குறிவகை (Objective) தேர்வு வகையாக நடத்தப்படும். இதில்,
·         பொது அறிவு பாடத்திலிருந்து 75 வினாக்களும்
·         அறிவுக்கூர்மை (Mental Ability ) பாடத்திலிருந்து 25 வினாக்களும்
·         பொதுத்தமிழ் (அ) பொது ஆங்கிலம் பாடத்திலிருந்து 100 வினாக்களும் கேட்கப்படும்.
அடுத்து மெயின் தேர்வு. இது முழுவதும் எழுத்துத் தேர்வாகும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கான இந்தத் தேர்வில் இரண்டு பிரிவிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
மெயின் தேர்வு பொது அறிவு பாடத்திட்டம்
TNPSC – Group II - A தேர்வு- 2015 (நேர்முகத்தேர்வு இல்லாதது)
பதவிகள் : அரசு கருவுலத்தில் கணக்காளர் பணி மற்றும் கணக்கு துறை, வன துறையில் உதவியாளர் பணி.
தமிழக அரசு துறைகளில் கிளார்க் பணிகள், வருவாய் நிர்வாகத்தில் உதவியாளர், சிறை துறையில் உதவியாளர், அனைத்து துறைகளின் உதவியாளர்கள் வணி வரி துறையில் கமிஷனர் மற்றும் உதவியாளர்கள்.
இந்தத் தேர்வு ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் 300 மதிப்பெண்கள் கொண்ட 200 வினாக்கள் கேட்கப்படுகின்றன. கொள்குறிவகை தேர்வாக நடத்தப்படும் இதில் பொதுஅறிவு பாடத்திலிருந்து 75 வினாக்களும், அறிவுக்கூர்மை பாடத்திலிருந்து 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். வினாக்கள் பட்டப்படிப்பு தரத்தில் அமைந்திருக்கும்.
 TNPSC – Group III தேர்வு- 2015
இந்தத் தேர்வு தீயணைப்பு பணிகளில் ஸ்டேசன் மாஸ்டர் பணிகளுக்கானதாகும்.
இந்தத் தேர்வு ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் 300 மதிப்பெண்கள் கொண்ட 200 வினாக்கள் கேட்கப்படுகின்றன. கொள்குறிவகை தேர்வாக நடத்தப்படும் இதில் பொதுஅறிவு பாடத்திலிருந்து 75 வினாக்களும், அறிவுக்கூர்மை பாடத்திலிருந்து 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். வினாக்கள் 10ம் வகுப்புத் தரத்தில் அமைந்திருக்கும். இதற்கடுத்து உடற்தகுதித் தேர்வு நடைபெறும்.

TNPSC – Group III - A தேர்வு- 2015
இந்தத் தேர்வு கூட்டுறவு பணிகளில் துணை ஆய்வாளர் மற்றும் பிற பணிகளுக்கானதாகும்.
இந்தத் தேர்வில் 300 மதிப்பெண்கள் கொண்ட 200 வினாக்கள் கேட்கப்படுகின்றன. கொள்குறிவகை தேர்வாக நடத்தப்படும் இதில் பொதுஅறிவு பாடத்திலிருந்து 150 வினாக்களும், அறிவுக்கூர்மை பாடத்திலிருந்து 50 வினாக்களும் கேட்கப்படும். வினாக்கள் 10ம் வகுப்புத் தரத்தில் அமைந்திருக்கும். இதற்கடுத்து 40 மதிப்பெண்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும்.

TNPSC – Group IV தேர்வு- 2015
பதவிகள் : இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் – நிலை 1, தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் – நிலை 3, நில அளவர், வரைவாளர்.
இந்தத் தேர்வில் 300 மதிப்பெண்கள் கொண்ட 200 வினாக்கள் கேட்கப்படுகின்றன. கொள்குறிவகை தேர்வாக நடத்தப்படும் இதில் பொதுஅறிவு பாடத்திலிருந்து 75 வினாக்களும், அறிவுக்கூர்மை பாடத்திலிருந்து 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். வினாக்கள் 10ம் வகுப்புத் தரத்தில் அமைந்திருக்கும்.

TNPSC – Group IV வன பணிகள் தேர்வு - 2015
கொள்குறிவகை வகைத் தேர்வாக நடக்கும் இதில் மூன்று தாள்கள் இடம் பெறும். தாள்- 1 , தாள் -2, விருப்பப்பாடமாகும். தாள் -3 பொது அறிவு பாடமாகும்.
தாள் 1 மற்றும் தாள் 2க்கான விருப்பப்பாடங்களை கொடுக்கப்பட்டுள்ள 21 விருப்பப்பாடங்களிலிருந்து இரண்டைத் தேர்வு செய்து கொள்ளலாம். இரு பாடங்களிலிருந்தும் 300 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கேட்கப்படும். தாள் - 3 க்கான பொது அறிவு தேர்வு 300 மதிப்பெண்களைக் கொண்டாதாகும். இதில் பொது அறிவுக்கான 150 வினாக்களும், அறிவுக்கூர்மைக்கு 50 வினாக்களும், கேட்கப்படும். அடுத்து நேர்முகத் தேர்வு 120 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
விருப்பப்பாடங்களின் வரிசை
1.    வேளாண்மை
2.    தாவரவியல்
3.    வேதியியல்
4.    கம்யுட்டர் அப்ளிகேசன்ஸ்
5.    கம்ப்யுட்டர் அறிவியல்
6.    வேளாண்மை பொறியியல்
7.    வேதியியல்பொறியியல்
8.    சிவில் பொறியியல்
9.    கம்ப்யுட்டர் அறிவியல் பொறியியல்
10.  எலக்ட்ரிக்கல் பொறியியல்
11.  எலக்ட்ரானிக்ஸ் பொறியியல்
12.  மெக்கானிக்கல் பொறியியல்
13.  சுற்றுச்சூழல் பொறியியல்
14.  வனவியல்
15.  ஜியாலஜி
16.  தோட்டக்கலை
17.  கணிதம்
18.  இயற்பியல்
19.  புள்ளியில்
20.  கால்நடை அறிவியல்
21.  விலங்கியல்
பொது அறிவு பாடத்திட்டம்

VAO  கிராம நிர்வாகம்
கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் 300 மதிப்பெண்களுக்கான 200 வினாக்கள் கொண்டு கொள்குறிவகை தேர்வாக நடத்தப்படும். இதில் பொது அறிவு பாடத்திலிருந்து 75 வினாக்களும், கிராம நிர்வாக நடைமுறைகளிலிருந்து 25 வினாக்களும். அறிவுக்கூர்மை பாடத்திலிருந்து 20 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 வினாக்களும் கேட்கப்படும். பத்தாம் வகுப்புத் தரத்தில் கேள்விகள் அமைந்திருக்கும்.

0 comments:

Post a Comment