Thursday, January 22, 2015

பொருத்துதல் என்ற பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள 4 சொற்களுக்கு ஏற்ற சரியான பொருளை அறிந்து அவற்றுடன் பொருத்த வேண்டும். முக்கியமான தமிழ்ச் சொற்களும், அதன் பொருள்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அண்மை - பக்கம்
அவா - ஆசை
அஞ்சுதல் - பயப்படுதல்
அரவம் - பாம்பு, ஓசை
அவலம் - துன்பம்
ஆலயம் - கோயில்
ஆக்கம் - செல்வம்
ஆடவர் - ஆண்கள்
ஆகம் - உடல்
ஆயுள் - வாழ்நாள்
இணை - சேர்
இன்மை - வறுமை
இடர் - துன்பம்
இறை - கடவுள்
இன்னா - துன்பம்
ஈகை - கொடை
ஈசிதன் - அரசன்
ஈசை - கலப்பை
ஈடுபாடு - ஆர்வம்
ஈளை - கோளை
உத்தரம் - விடை, மறுமொழி
உரன் - அறிவு, திண்மை, வெற்றி
உவரி - கடல்
உவகை - மகிழ்ச்சி
உண்டி - உணவு
ஊழியம் - தொண்டு
ஊன் - இறைச்சி
ஊழி - உலகம்
ஊன்றும் - தாங்கும்
ஊகை - கல்வி
எழில் - அழகு
எல் - பகல்
எம்பி - தம்பி
என்பு - எலும்பு
எத்தனம் - முயற்சி
ஏர் - அழகு
ஏத்தும் - போற்றும்
ஏவலர் - பணியாளர்
ஏழிலி - மேகம்
ஏதம் - துன்பம்
ஐது - அழகு
ஐனம் - மான்தோல்
ஐயன் - தலைவன்
ஐராவணம் - யானை
ஒல்லை - விரைந்து
ஒழி - நீக்கு
ஒறுத்தல் - தண்டித்தல்
ஒன்னார் - பகைவர்
ஒற்கம் - வறுமை
ஓரால் - நீக்குதல்
ஓதுதல் - படித்தல்
ஓதம் - ஈரம்
ஓங்க - உயர
ஓர்மம் - மனவுறுதி
ஓள
ஒளடதம் - மருந்து
ஔவியம் - பொறாமை
ஔசீரம் - இருக்கை, ஆசனம்
ஔதசியம் - பால்
ஔதநிகன் - சமையற்காரன்

0 comments:

Post a Comment