Wednesday, November 12, 2014

பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல்ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர். எடுத்துக்காட்டாக,
  • நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் - செம்மை, பசுமை, வெண்மை.
  • வடிவத்தைக் குறிக்குஞ் சொற்கள் - வட்டம், சதுரம்.
  • சுவையைக் குறிக்குஞ் சொற்கள் - இனிமை, கசப்பு
  • குணத்தைக் குறிக்குஞ் சொற்கள் - நன்மை, தீமை
  • எண்ணிக்கையைக் குறிக்குஞ் சொற்கள் - ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.
எடுத்துக்காட்டுக்கள் (முறையே):
  • வெண்கரடி = வெண்மைகரடி
  • வட்டக்கோடு = வட்டமான கோடு
  • புளிச்சோறு = புளிக்கும் சோறு
  • பெருங்கடல் = பெருமை (பெரிய) + கடல்
  • மூவேந்தர் = மூன்று + வேந்தர்
--------------------------------------------------------------------
  • நீளமுடி, நன்செய், புன்செய்
  • தொல்லுலகு
  • அருந்தவர், நல்வினை
  • பல்லுயிர், நல்வினை, தீவினை, பேரின்பம்
  • வம்மை
  • நல்லொழுக்கம்
  • அருவினை
  • செந்தமிழ்
  • நெடுநீர்
  • நன்னுதல்
  • புன்கண், மென்கண்
  • அருவிலை, நன்கலம்
  • நெடுநீர்
  • வெள்ளெயிறு
  • தொன்மக்கள்
  • அருவினை
  • பெருந்தகை
  • திண்டேர்
  • மென்மலர்
  • வல்லுடல்
  • வெவ்விடம்
  • வன்கானகம்
  • வன்தூறு
  • நுண்டுளி
  • மென்குறள்
  • தண்கடல்
  • செங்கதிர்
  • கூர்ம்படை
  • முதுமரம்
  • பச்சூன், பைந்நிணம்
  • நல்லுரை
  • ஆருயிர்
  • கருமுகில்
  • சேவடி
  • நற்றாய்
  • செழும்பொன்
  • செந்தமிழ்
  • பழ ஆவணம்
  • தீநெறி
  • வெண்குடை
  • கருங்கோல்
  • நெடுமதில்
  • செந்நாய்
  • கருமுகில், வெண்மதி
  • பெரும்பேறு
  • பழந்தமிழ், சிற்றினம், பெருங்குணம்
  • செம்பொன்
  • புன்கண், பெரும்பெயர், அரும்பெறல்
  • நெடுநாவாய்
  • நற்கரிகள், இன்னமுதம்
  • நற்கரிகள், இன்னமுதம்
  • ஒண்பொருள்
  • செங்கதிர், பெருவரி
  • பெருங்கரி
  • பெருஞ்சிரம், தண்டளி
  • நற்பயன்
  • தோள்கவின்
  • நன்மனை
  • இல்பருவம்
  • ஆரிருள்
  • பேரறிவு
  • கருங்கொடி
  • இருங்கடல்
  • இன்னரம்பு
  • நெடுங்கண்
  • செழுந்துயில்
  • அருமறை
  • செந்தழல்
  • பெருங்கடல்
  • வன்காயம்
  • மெல்லிதழ்
  • அருந்தவம்
  • அருந்தமிழ்
  • புல்லடிமை
  • பெருங்குணம்
  • நன்மான், நெடுந்தேர்
  • எண்பொருள்
  • தண்குடை
  • தெண்டிரை
  • பெருந்தவம்
  • கருமுகில்
  • முத்து முரசம்
  • சிற்றன்னை
  • முச்சங்கம்
  • வெண்தயிர்
  • செந்நெல்
  • வெறுங்கை
  • கடும்பகை

0 comments:

Post a Comment