Tuesday, November 18, 2014

கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் மாணாக்கர்கட்கு பொதுத்தமிழ் பாடமாக உள்ளது. அவர்கள் இலக்கணத் தமிழை நன்கு அறிந்து கொள்ளவும், மொழிப்பயிற்சி பெறவும் சில அடிப்படை விதிகளை அறிதல் நலம்.

வல்லின மெய்கள் அல்லது ஒற்றெழுத்துக்கள் மிகுமிடங்கள், மிகா இடங்களை அறிந்து கொள்வதால் பிழையின்றித் தமிழை எழுதிட இயலும்.

எளிமையான சில இலக்கண விதிகளை விளக்கிக் கூறுவதால் அவர்கட்கு மொழிப்பயிற்சி இலகுவாகலாம்.

கல்லி கேள்வியா? கல்விக் கேள்வியா?
பத்து பதினைந்தா? பத்துப் பதினைந்தா?
பாடா பெண்ணா? பாடாப் பெண்ணா?
எழுத தெரியுமா? எழுதத் தெரியுமா?


இவை போல்வன குழப்பம் தரும் சில சான்றுகள். இவற்றில் அடிக்கோடிட்ட எழுத்துக்கள் ஒற்று / புள்ளி எழுத்துக்கள், இவை தொடரில் மிகுந்து வருதலே 'ஒற்று மிகுதல்' அல்லது 'வல்லினம் மிகுதல்' ஆகும்.

வேலை செய்தான்
வேலைச் செய்தான்

'வேலை செய்தான்' என்பதில் ஒற்று மிகவில்லை. இது, பணியைச் செய்தான் என்ற பொருள்பட அமைந்தது. 'வேலைச் செய்தான்' என்பதில் ஒற்று (ச்) மிகுந்தது. 'வேல்' எனும் கருவியைச் (வேல்+) செய்தான் என்ற பொருள் பெற்றது.

இவ்விரு தொடர்களும் ஒற்று மிகுந்தாலும், ஒற்று மிகாமலும் இரு வேறு பொருள்பட்டன.

இரு சொற்கள் இணையுமிடத்தில் 'ஒற்று மிகுதல்' உண்டாகும். சொற்கள் இணைவதைப்புணர்ச்சிஎன்பர்.

புணர்ச்சி என்பதன் விளக்கம்
மெய், உயிர் ஆகியவற்றை முதலும் இறுதியுமாகக் கொண்ட பகாப்பதம்
(பிரிக்க முடியாத சொல்) பகுபதம் (பிரிக்கக் கூடிய சொல்) ஆகிய இரு பதங்களும் தன்னொடுதானும், பிறிதொடு பிறிதுமாய், அல்வழிப்பொருள் அல்லது வேற்றுமைப் பொருளினால் பொருந்துமிடத்து, நிலைமொழியும் வருமொழியும் இயல்பாகவோ, விகாரமாகவோ புணருவது 'புணர்ச்சி' எனப்படும்.
(நன்னூல். சூத்: )

பூ + கூட்டம் = பூக்கூட்டம்
'பூ' என்பது - நிலைமொழி (நின்ற சொல்)
'கூட்டம்' என்பது - வருமொழி (வருகின்ற சொல்)

'க்' என்ற ஒற்று / மெய் / புள்ளியெழுத்து இவ்விரண்டின் இடையே மிக்கு நின்றது. 'பூக்கூட்டம’¡னது.

வல்லினம் - க் ச் ட் த் ப் ற்
மெல்லினம் - ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம் - ய் ர் ல் வ் ழ் ள் - (18 மெய்கள்)

என 3 வகையாக மெய்யெழுத்துக்களமையும். வல்லின மெய்களுள் ட், ற் நீங்கிய பிற நான்கும் (க், ச், த் ப்) 12 உயிரெழுத்துக்களுடன் சேருகின்றன. உயிர்மெய்யாக மாறி சொல்லின் முதலில் வருகின்றன. (ட், ற் என்பன - மொழி முதலில் வாரா).

வருமொழியில் க், ச், த், ப் - வரும்பொழுது எந்த மெய் வருகிறதோ அந்த மெய்க்கு ஏற்ற மெய்யெழுத்து புணர்ச்சியில் மிகுதலை 'வல்லினம் மிகுதல்' என்பர்.

1.1 புணர்ச்சியின் மாற்றங்கள்:

இரு சொற்கள் (நிலை மொழி + வருமொழி) சேருமிடத்துப் புணர்ச்சி மாற்றங்கள் நிகழும். அவ்விடத்து சொற்கள் இயல்பாகப் புணருதலை 'இயல்புப் புணர்ச்சி' என்றும், விகாரமாக/ மாற்றங்களுடன் புணருதலை 'விகாரப் புணர்ச்சி' என்றும் இரு வகைப்படுத்துவர்.

1.1.1 இயல்புப் புணர்ச்சி:
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இல்லாது சேருவது இயல்புப் புணர்ச்சி.

.ம். வாழை + மரம் = வாழைமரம்
பொன் + மலை = பொன்மலை

1.1.2 விகாரப் புணர்ச்சி:
புணர்ச்சியில், ஓர் (1) எழுத்தோ, சாரியையோ புதிதாகத் தோன்றுதல், (2) வேறுபடுதல் (3) கெடுதல் - என்ற மூன்று நிலைகளில் மாற்றம் பெறலாம். அம்மாற்றம், நிலைமொழி, வருமொழிகளின் முதல், இடை, கடை எனும் மூன்று இடங்களிலும் நிகழலாம். இத்தகைய புணர்ச்சியை 'விகாரப் புணர்ச்சி' என்பர்.

. 'தோன்றல் விகாரம்':

நிலைமொழி, வருமொழிகட்கிடையே புதிதாக ஓர் எழுத்து தோன்றுவதுதோன்றல் விகாரம்ஆகும்.

.ம். வாழை + பழம் = வாழைப்பழம்
('ப்' - புதிதாகத் தோன்றியது)

. 'திரிதல் விகாரம்':

இரு மொழிகளிலும் உள்ள எழுத்துக்கள் மாறி வருவது, ‘திரிதல் விகாரம்’.

.ம். மண் + குடம் = மட்குடம்
'ண்', 'ட்' ஆகத் திரிந்தது.


. 'கெடுதல்' விகாரம்:

இருமொழிகட்கிடையேயான எழுத்து கெட்டுப்பின் சேருவது.

.ம். மரம் + வேர் = மரவேர்
'ம்' கெட்டது; பின் சேர்ந்தது.

மேற்சுட்டிய புணர்ச்சி மாற்றங்களில் ஒன்றான 'தோன்றல் விகாரம்' என்பதனை ஒட்டியே நாம் காண இருக்கும் 'வல்லினம் மிகுதல்' அல்லது 'ஒற்று மிகுதல்' அமைகிறது.

வல்லினம் மிகுதலின் விதிகள்:
1. 'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும்வித வாதன மன்னே'
(நன். சூத்: 165)
-என்பது இலக்கணவிதி. அதாவது நிலைமொழியில் உயிர் எழுத்துக்கள் இறுதியாக நிற்க, வருமொழி முதலில் கசதப வரின், அவ்விடத்து வந்த வல்லின மெய்கள் மிகுந்து வரும். சிறுபான்மை மிகாமலும் வரும் என்பது பொதுவிதி.

.ம். ஆடூஉ + குறியன் = ஆடூஉக் குறியன்

நிலைமொழி - ஆடூஉ (ஆண்மகன்)
''கரம்* என்பது இதன் இறுதி எழுத்து. அதாவது உயிரீறு.

வருமொழி - குறியன் (சிறியவன்)
(க்+ = கு)

வருமொழி 'க்' என்ற மெய்யே, இரு சொற்களின் இடையில் மிகுந்து வந்த வல்லின மெய்யாகும். எனவே 'ஆடூஉக்குறியன்' என்றானது இதனை அல்வழிப்புணர்ச்சியில் அடக்குவர்.

.ம். செட்டி + தெரு = செட்டித்தெரு
(ட் + ) (த் + )

நிலைமொழியில் '' என்ற உயிரீறு நிற்க, வருமொழியில் 'த்' என்ற மெய்முதல் சேருமிடத்து 'த்' என்ற மெய், இடையே மிகுந்தது. ‘செட்டித்தெருஎன்றானது, இதனை வேற்றுமைப் புணர்ச்சி என்பர்.

இவ்வல்லின மெய்கள் உயிரீற்றின் முன் இவ்வாறு புணரும். இனி, வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்பதன் விளக்கம் காணலாம்.

*கரம், காரம் - என்பன சாரியைகள்
கரம் - குறில் எழுத்தையும் (''கரம்), (''கரம்)
காரம் - நெடில் எழுத்தையும் (''காரம்), (''காரம்) சுட்டுவன.

1.1 புணர்ச்சியின் வகைகள்
வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என இருவகையாகப் புணர்ச்சியைக் குறிப்பர்.

.ம். 'கடவுட் கருணை' - வேற்றுமைப் புணர்ச்சி
கடவுள் கருணை செய்தார்’ - அல்வழிப் புணர்ச்சி

இவை எவ்விதம் வேறுபட்டன?

'' முதல் 'கண்' வரை உள்ள வேற்றுமை உருபுகள் மறைந்தோ அல்லது வெளிப்பட்டோ வருமாறு சொற்கள் புணருதல், 'வேற்றுமைப் புணர்ச்சி'.

வேற்றுமை அல்லாத வழியில் சொற்கள் புணருதல் 'அல்வழிப் புணர்ச்சி'.

1.2 தொகையும் விரியும்:
வேற்றுமைஉருபுகள் மறைந்து வந்தால் 'வேற்றுமைத் தொகை' என்றும்; மறையாமல் வெளிப்படையாக வந்தால் 'வேற்றுமை விரி' என்றும் கூறுவர்.

வேற்றுமைத் தொகை
வேற்றுமை விரி

நிலங்கடந்தான் ('' - மறைந்தது)
'நிலத்தைக் கடந்தான்'
('' - வெளிப்படை / விரிந்தது)
கல்லெறிந்தான் ('ஆல்' மறைந்தது)
'கல்லால் எறிந்தான்'
('ஆல்' / வெளிப்படை)
கொற்றன் மகன் ('கு' - மறைந்தது)
'கொற்றனுக்கு மகன்'
('கு' - வெளிப்படை)
மலை வீழருவி ('இன்' - மறைந்தது)
மலையின் வீழருவி
('இன்' - வெளிப்படை)
சாத்தன் கை ('அது' - மறைந்தது)
சாத்தனது கை
('அது' - வெளிப்படை)
குன்றக்குகை ('கண்' - மறைந்தது)
குன்றத்தின் கண் குகை
('கண்' - வெளிப்படை)

1.3 வேற்றுமையாவது யாது?
பொருளை வேறுபடுத்துவது வேற்றுமையாம்.

.ம். 'அமுதன் கொடுத்தான்' - எம்மாற்றமும் இல்லாத எழுவாய்த்தொடர்.
'அமுதனுக்குக் கொடுத்தான்' - மாற்றமுள்ள தொடர்.

பொருள் மாற்றம் தரும் எழுத்தான 'கு' என்பது வேற்றுமை உருபாகும்.

0 comments:

Post a Comment